/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_3468.jpg)
சிதம்பரம் காந்தி சிலை அருகே பேருந்து நிழற்குடையில் கீரப்பாளையம் பகுதியிலுள்ள தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் பயிலும் மாணவர் ஒருவர் சிதம்பரத்தில் அரசு பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவிக்கு தாலி கட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனைப் பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில் பள்ளிக்கு செல்லும் மாணவிகளின் பெற்றோர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து பல்வேறு தரப்பினர் சமூக வலைதளங்களில் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இதனையொட்டி சம்பந்தப்பட்ட மாணவர் மற்றும் மாணவியர் பயிலும் பள்ளி கல்லூரியில் காவல்துறை மற்றும் கல்வித்துறை இணைந்து மாணவிகள் மாணவர்களுடன் கலந்துரையாடினர். அப்போது, சுய ஒழுக்கத்துடன் நடந்து கொள்வது குறித்தும், பாலியல் ரீதியான நடைமுறைகள் குறித்தும் மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். இந்நிகழ்வில் சிதம்பரம் கல்வி மாவட்ட அலுவலர் ரவிசங்கர், சிதம்பரம் நகர காவல் உதவி ஆய்வாளர் நாகராஜன், பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)