/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/bus4434.jpg)
கடலூர் மாவட்டம், சிதம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து இன்று (31/03/2022) இரவு கும்பகோணம் கோட்ட பேருந்து ஒன்று கும்பகோணத்திற்கு சென்றுள்ளது. இது சிதம்பரம் புறவழிச்சாலையில் சென்றபோது, எதிரே வந்த கார் திடீரென திரும்பியதால், ஓட்டுனர், கார் மீது மோதுவதைத் தவிர்க்கும் விதத்தில் பேருந்தைத் திருப்பியதால் அருகேயுள்ள பள்ளத்தில் பேருந்து தலைக்குப்புறக்கவிழ்ந்தது.
இதில் பயணம் செய்த 10- க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். அவர்களை மீட்ட அப்பகுதி பொதுமக்கள் 108 அம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதில் பேருந்து ஓட்டுனருக்கு பலத்த காயம் ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், போக்குவரத்தைச் சரி செய்தனர். பின்னர், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)