ADVERTISEMENT

திருநங்கைகளுக்கு விழிப்புணர்வை  ஏற்படுத்திய சிதம்பரம் டி.எஸ்.பி.! 

06:34 PM Oct 01, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள திருநங்கைகள் சிதம்பரம் பகுதியில் பேருந்து நிலையம், புறவழிச்சாலை உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு கொடுப்பதாகச் சிதம்பரம் டி.எஸ்.பி. ரமேஷ்ராஜ்க்கு பல்வேறு புகார்கள் வந்தது.


அதனைத்தொடர்ந்து, சிதம்பரம் பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட திருநங்கைகளை அழைத்து மக்களுக்கு இடையூறு செய்வது குற்றமாகும். சமூகத்தில் திருநங்கைகளுக்கு மரியாதை ஏற்படும் வகையில் அரசு பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதனைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். என அறிவுரை வழங்கினார். மேலும் வாழ்வாதாரத்திற்கு வழி செய்யும் வகையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் சிதம்பரம் சார்ஆட்சியர் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளலாம் எனத் திருநங்கைகளுக்கு அரசு செயல்படுத்தும் திட்டங்களை விளக்கிக் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.


இதனையும் மீறி பொது மக்களைத் துன்புறுத்தும் வகையில் நடந்து கொண்டால் திருநங்கைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT