கடலூர் மாவட்டம், சிதம்பரம் ரயில் நிலையத்தில் இன்று (05/03/2021) ரயில் ஏறவந்த ஒருவர், ரூபாய் 15 ஆயிரம் மதிப்புள்ள செல்ஃபோனைத் தவறவிட்டுச் சென்றுள்ளார். பின்னர், அந்த இடத்தில் டீ விற்பனை செய்துகொண்டிருந்த இளைஞர் தியாகராஜன் என்பவர் அந்த செல்ஃபோனை எடுத்து அங்கு பணியில் இருந்த இருப்புப் பாதை காவலரிடம் ஒப்படைத்துள்ளார்.
பின்னர், இதுகுறித்து விவரம் அறிந்த இருப்புப் பாதை காவல் ஆய்வாளர் சம்பந்தப்பட்ட செல்ஃபோன் உரிமையாளரை நேரில் வரவழைத்து தக்க அறிவுரை வழங்கி செல்ஃபோனை ஒப்படைத்துள்ளார். மேலும், செல்ஃபோனை நேர்மையாகக் காவலர்களிடம் ஒப்படைத்த இளைஞர் தியாகராஜனுக்கு ஆய்வாளர் அம்பேத்கர் உள்ளிட்ட காவல்துறையினர் வெகுமதி வழங்கிப் பாராட்டியுள்ளனர். இந்தச் செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.