தஞ்சையில் அய்யன் திருவள்ளுவர் சிலையை அவமதித்ததை கண்டித்து சிதம்பரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்ட செய்திதொடர்பாளர் திருவரசு, நகரசெயலாளர் ஆதிமூலம், இன்பவளவன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கட்சியினர் கலந்துகொண்டு திருவள்ளுவர் சிலை அவமதிப்பை கண்டித்து கோசங்களை எழுப்பினார்கள். இதனை தொடர்ந்து அதே இடத்தில் ஐந்து நிமிடம் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த வந்த காவல்துறையினர் அனைவரையும் கலைந்து போக செய்தனர்.
திருவள்ளுவர் சிலை அவமதிப்பை கண்டித்து மறியல் போராட்டம்
Advertisment