Advertisment

பெண்களின் மரியாதைக்காகக் கடைசி மூச்சுள்ள வரை போராடுவேன் - கைதுக்குப் பிறகு குஷ்பு ட்விட்!

ிுப

பெண்கள் தொடர்பாக மனுநீதியில்கூறிய சில கருத்துகளை, சமூக ஊடகம் வாயிலாக திருமாவளவன் சில தினங்களுக்கு முன்பு பேசியிருந்தார். இதற்கு இந்து அமைப்புக்கள், பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் திருமாவளவனின் சொந்தத் தொகுதியான சிதம்பரத்தில் அவரை கண்டித்து, குஷ்பு தலைமையில் இன்று போராட்டம் நடைபெறுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

Advertisment

இதற்கிடையே இந்தப் போராட்டத்திற்கு சிதம்பரம் காவல்துறையினர் நேற்று இரவு அனுமதி மறுத்திருந்தனர். இந்நிலையில் இன்று காலை தடையை மீறி போராட்டம் நடத்த சிதம்பரம் நோக்கி காரில் சென்ற நடிகை குஷ்பு-வை முட்டுக்காடு அருகே, காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். கைது நடவடிக்கைக்குப் பிறகு இதுதொடர்பாக நடிகை குஷ்பு ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார். அதில், "பெண்களின் மரியாதைக்காகக் கடைசி மூச்சுள்ள வரை போராடுவேன். மோடி அவர்கள் பெண்களின் பாதுகாப்பு பற்றி எப்போதும் பேசி வருகிறார். விசிகவினருக்கு பெண்களின்மதிப்பு அந்நியமாக இருக்கிறது" என்றுஅவர் தன்னுடைய ட்விட்டில் தெரிவித்துள்ளார்.

Advertisment

kushboo
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe