chidambaram police dsp masks, sanitizers provieded

கடலூர் மாவட்டம், சிதம்பரம் காவல் உட்கோட்ட டி.எஸ்.பி. அலுவலகத்தில் உழைப்பாளர் தினத்தையொட்டி, கடலூர் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கம், சிதம்பரம் தாலுகா மருந்து வணிகர்கள் மற்றும் மருந்து விற்பனை பிரதிநிதிகள் சார்பாக சிதம்பரம் பகுதியில் கரோனா நோய் பரவல் காலத்தில் இரவு பகல் பாராமல் மக்களுக்கான சேவைகளை மாவட்ட நிர்வாகத்திடம் எடுத்துச் செல்லும் பணிகளை செய்தனர். அதனைப் பாராட்டும் விதமாக சிதம்பரம் பகுதி பத்திரிகையாளர்களுக்கு கரோனா தடுப்பு மருந்து, முகக்கவசம், கபசுர குடிநீர் பொடி மற்றும் கிருமிநாசினி வழங்கும் நிகழ்ச்சி இன்று (01/05/2021) நடைபெற்றது.

Advertisment

தமிழ்நாடு மருந்தாளுனர் சங்கச் செயலாளர் வெங்கடசுந்தரம் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக சிதம்பரம் டி.எஸ்.பி. லாமேக் கலந்து கொண்டு முகக்கவசம் உள்ளிட்டவையைப் பத்திரிகையாளர்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மருந்து வணிகர் சங்கத்தின் சிதம்பரம் நகர தலைவர் கலியபெருமாள், செயலாளர் பாலமுருகன், பொருளாளர் கண்ணன், மொத்த மருந்து பிரிவுத் தலைவர் பிரகாஷ், மருந்து விற்பனை பிரதிநிதி சசிகுமார், சிதம்பரம் பத்திரிகையாளர்கள் முன்னேற்ற சங்கத் தலைவர் செந்தில்குமார், செயலாளர் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.