Skip to main content

சிதம்பரத்தில் கடவுச்சீட்டு சேவை மையம் திறப்பு

Published on 07/03/2019 | Edited on 07/03/2019
passport office

 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் தலைமை தபால் நிலையத்தில் கடவுச்சீட்டு சேவை மையம் தொடங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிதம்பரம் தொகுதி எம்பி சந்திரகாசி, அஞ்சல்துறையில் மத்திய மண்டல தலைவர்(திருச்சி) அம்பேஷ்உப்மண்யு, சென்னை மண்டல கடவுச்சீட்டு அதிகாரி அசோக்பாபு உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு துவக்கி வைத்தனர்.

 

இந்த கடவுச்சீட்டு சேவை மையத்தை புது கடவுச்சீட்டு விண்ணப்பித்தல், புதுப்பித்தல் ஆகிய சேவைகள் வழங்கப்படும். இனிமேல் சிதம்பரம் அதன் சுற்று வட்ட பகுதிகளை சார்ந்தவர்கள் கடவுச்சீட்டு விண்ணப்பிக்க சென்னைக்கு செல்ல வேவையில்லை அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இரண்டு நபர்களுக்கு கடவுச்சீட்டு பதிவு செய்ததற்கான ஒப்புதல் ரசீது வழங்கப்பட்டது.

 

இதில் கடலூர் மாவட்ட அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர் சிவப்பிரகாசம், உதவி கண்காணிப்பாளர் அப்துல்லத்தீப், சிதம்பரம் தலைமை அஞ்சல் அதிகாரி ரத்தினசபாபதி, சிதம்பரம் அஞ்சல் கோட்ட உதவி கண்காணிப்பாளர் சுவாமிநாதன் உள்ளிட்ட அஞ்சல்துறை ஊழியர்கள்,பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரம் கோவில் குளத்தில் குளிக்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம்

Published on 04/02/2024 | Edited on 04/02/2024
man who went to bathe in the Chidambaram temple pool drowned

சிதம்பரம் இளமையாக்கினார் கோவில் தெருவில் பழம்பெரும் சிவன் கோவில் உள்ளது.  இந்த கோவிலில் சனிக்கிழமை மாலை திருநீலகண்ட நாயனாரின் குருபூஜை விழா நடைபெற்றது. இவ்விழாவில் கோவில் குளத்தில் இறங்கி சுவாமி மற்றும் பக்தர்கள் நீராடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பலர் குளக்கரையில் கூடியிருந்தனர். சுவாமிக்கு குளக்கரையில் பூஜை நடந்து தீர்த்தவாரி நடைபெற்றது. 

இதனைத் தொடர்ந்து அங்கிருந்து பக்தர்களும் பொதுமக்களும் குலத்தில் நீராடச் சென்றனர் அப்போது கோவில் தெருவை சேர்ந்த வெங்கடேசன்(47) என்பவர் கோயில் குளத்தில் இறங்கி நீராடினார். சிறிது தூரம் தண்ணீரில் நீந்தி சென்று குளத்தின் நடுவே உள்ள மண்டபம் அருகே நீரில் மூழ்கியுள்ளார். மீண்டும் அவர் வெளியே வரவில்லை. 

இதைப் பார்த்த அப்பகுதியில் இருந்த திமுக நகர்மன்ற உறுப்பினர் ஜேம்ஸ் விஜயராகவன் தீயணைப்பு மற்றும் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பெயரில் நகர காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சம்பந்தப்பட்ட வெங்கடேசனை குளத்தில் இறங்கி ரப்பர் படகு மூலம் தேடும் பணியில் ஈடுபட்டனர் தொடர்ந்து ஒரு மணி நேரம் தேடிய நிலையில் அவரது உடல் சடலமாக மீட்கப்பட்டது.  இது குறித்து சிதம்பர நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  குளத்தில் மூழ்கிய தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில்  சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியல்; இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

Published on 11/01/2024 | Edited on 11/01/2024
World's Most Powerful Passport List; Do you know how many places in India?

உலகின் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் பலவீனமான பாஸ்போர்டுகள் குறித்து தரவரிசையை ஹென்ஸி பார்போர்ட் இன்டெக்ஸ் வெளியிட்டுள்ளது. அந்த தரவரிசையை, சர்வதேச விமான போக்குவரத்து சங்க தரவுகளின் அடிப்படையில் பாஸ்போர்ட்டுகள் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளன. அதில், விசா இல்லாமல், பாஸ்போர்ட் மூலம் மட்டுமே உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு பயணிக்க அனுமதிக்கும் நாடுகளின் பாஸ்போர்ட்டுகள் ‘சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டுகள்’ என்று கருதப்படுகிறது. இந்த சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டுகள் தரவரிசை பட்டியலில், 194 நாடுகள் இடம்பெற்றிருக்கின்றன. 

அந்த வகையில், இந்த பட்டியலில் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் முதலிடத்தில் உள்ளனர். அதாவது, இந்த நாடுகளின் பாஸ்போர்ட்டுகளை வைத்திருப்பவர்கள் உலக அளவில் 194 நாடுகளுக்குள் விசா இல்லாமல் செல்ல முடியும். இதையடுத்து, இரண்டாவது இடங்களை பிடித்துள்ள தென் கொரியா, ஸ்வீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் 193 நாடுகளுக்குள் விசா இல்லாமல் செல்ல முடியும். 

இதனை தொடர்ந்து, ஆஸ்திரியா, டென்மார்க், அயர்லாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளின் பாஸ்போர்ட்டுகளை வைத்திருப்பவர்கள், 192 நாடுகளுக்குள் விசா இல்லாமல் செல்ல முடியும். அதனை கருத்தில் கொண்டு இந்த நாடுகள் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளன. இந்த தரவரிசை பட்டியலில், சீனா 62வது இடத்தையும், இந்தியா 80வது இடத்தையும் பிடித்துள்ளது. 

இந்திய பாஸ்போர்ட் மூலம் 62 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய முடியும். அதில் இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, உள்ளிட்ட சுற்றுலா நாடுகளும் அடங்கும். இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான், இந்த தரவரிசையில் 101வது இடத்தை பிடித்துள்ளது. மேலும், ஈராக் 102வது இடத்தையும், ஆப்கானிஸ்தான் 104வது இடத்தையும் பிடித்துள்ளது.