Skip to main content

சிதம்பரம் நடராஜர் கோயிலில் வைக்கப்பட்ட பிரமாண்ட கொலு! 

Published on 26/09/2022 | Edited on 26/09/2022

 

Chidambaram Nataraja Temple's huge Kolu!

 

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயிலில் நவராத்திரி விழாவின் போது ஒவ்வொறு ஆண்டும் பிரமாண்டமான கொலு வைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு நவராத்திரி விழாவையொட்டி, செப்டம்பர் 26- ஆம் தேதி அன்று மாலை பிரம்மாண்டமான கொலு அமைக்கப்பட்டுள்ளது. இக்கொலுவில் சுமார் 3 ஆயிரத்து 500- க்கும் மேற்பட்ட பொம்மைகள் கொண்டு  அலங்கரிக்கப்பட்டுள்ளது.

 

நவராத்திரி தொடங்கும் செப்டம்பர் 26- ஆம் தேதி முதல் அக்டோபர் 5- ஆம் தேதி வரை தினமும் இரவு ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்மனுக்கு விசேஷ அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் செய்து ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். பக்தர்கள் கொலுவை காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினம்  கொலுவை கண்டுகளிக்கும் வகையில், கோயில் பொது தீக்ஷிதர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். சுமார் 21 அடி அகலமும், 21 அடி நீளமும்,  21அடி உயரமும், 21 படிகள் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்த கொலு மிக பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. இந்த கொலு, ஆன்மீகத்தின் பன்முகத்தன்மையைப் பிரதிபலிப்பதாக அமைகிறது. 

 

மண் வகையால் செய்யப்பட்ட பொம்மைகள் இங்கு வரிசைபடுத்தப்பட்டிருக்கிறது. கொலுவில் வைப்பதற்காக பக்தர்களும் புதிய பொம்மைகளை வழங்கி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியாவின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்கிய நாள்” - தொல்.திருமாவளவன்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
today India redemption started writing from Tamil Nadu says Thirumavalavan

சிதம்பரம் நடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்குட்பட்ட அவரது சொந்த ஊரான அங்கனூர்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனது தாயாருடன் வாக்களித்தார்.

இதனைதொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே வந்து பேசுகையில், இந்த தேர்தல் இரண்டு கட்சிகளுக்கு எதிரான தேர்தல் அல்ல. சங்‌பரிவார் மற்றும் இந்திய மக்களுக்கு இடையேயான தர்ம யுத்தம்.  நாட்டு மக்கள் வெற்றிபெற வேண்டுமென்பதற்காக இந்தியா கூட்டணி மக்கள் பக்கம் நிற்கிறது.‌ இந்திய அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும்.‌ நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.‌தமிழ்நாட்டில் 40க்கும் 40 இடங்களிலும் வெற்றி பெறும்.

கூட்டணி பலம், திமுக அரசின் மூன்றாண்டுகள் நலத்திட்டங்கள், இந்தியா கூட்டணியின் நோக்கங்களால் எங்கள் அணி மாபெரும் வெற்றி பெறும். இந்த தேசத்தின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்குகிறோம் என்பதை அறிவிக்கும் நாள் இன்று. தமிழ்நாட்டுப் பெண்கள் திமுக அரசின் மீது நன்மதிப்பை கொண்டுள்ளனர். டெல்லியில் பாஜக வென்றால் மாநில அரசுகளை கலைக்கும் நிலை வரலாம், அப்படி நடந்தால் மகளிர் உரிமைத் தொகைக்கு ஆபத்து வரலாம்.‌ தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும். ஆந்திரா, தெலுங்கானா கர்நாடகா மற்றும் கேரளாவில் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். சிதம்பரம் தொகுதியில் பானை சின்னம் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்” என்றார்.

Next Story

பாகிஸ்தானில் பழங்கால இந்து கோவில் இடித்து தகர்ப்பு!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Demolition of a Historic Hindu temple in Pakistan!

இந்தியா - பாகிஸ்தான் பிரிவதற்கு முன்னாள், ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையொட்டி, கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ‘கைபர் கோவில்’ என்ற பழங்கால இந்து கோவில் ஒன்று செயல்பட்டு வந்தது. அதன் பின்பு, 1947ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததற்குப் பின்னால், அங்குள்ள சிறுபான்மையின மக்களான இந்து மக்கள், இந்தியாவிற்கு புலம் பெயர்ந்து வந்தனர்.

இதனால், 1947ஆம் ஆண்டு முதல், அந்த இந்து கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் உள்ளே சென்று வழிபடவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, அந்த கோவில் மூடப்பட்டுள்ளது. காலப்போக்கில் இந்த கோவிலில் உள்ள செங்கற்கள் ஒவ்வொன்றாக விழுந்து, அந்த கோவில் சிதிலமடைந்து காட்சியளித்துள்ளது.

இந்த நிலையில், அந்தப் பழமையான இந்து கோவில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு முழுமையாக இடிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கோவில் அமைந்திருந்த இடத்தில் புதிதாக வர்த்தக வளாகம் ஒன்று அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து, பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கூறியதாவது, ‘முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மத முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று கட்டிடங்களின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பை உறுதி செய்வது மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளின் பொறுப்பாகும்’ என்று கூறியுள்ளது.