Chidambaram Nataraja Temple's huge Kolu!

Advertisment

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயிலில் நவராத்திரி விழாவின் போது ஒவ்வொறு ஆண்டும் பிரமாண்டமான கொலு வைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு நவராத்திரி விழாவையொட்டி, செப்டம்பர் 26- ஆம் தேதி அன்று மாலை பிரம்மாண்டமான கொலு அமைக்கப்பட்டுள்ளது. இக்கொலுவில் சுமார் 3 ஆயிரத்து 500- க்கும் மேற்பட்ட பொம்மைகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.

நவராத்திரி தொடங்கும் செப்டம்பர் 26- ஆம் தேதி முதல் அக்டோபர் 5- ஆம் தேதி வரை தினமும் இரவு ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்மனுக்கு விசேஷ அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் செய்து ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். பக்தர்கள் கொலுவை காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினம் கொலுவை கண்டுகளிக்கும் வகையில், கோயில் பொது தீக்ஷிதர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். சுமார் 21 அடி அகலமும், 21 அடி நீளமும், 21அடி உயரமும், 21 படிகள் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்த கொலு மிக பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. இந்த கொலு, ஆன்மீகத்தின் பன்முகத்தன்மையைப் பிரதிபலிப்பதாக அமைகிறது.

மண் வகையால் செய்யப்பட்ட பொம்மைகள் இங்கு வரிசைபடுத்தப்பட்டிருக்கிறது. கொலுவில் வைப்பதற்காக பக்தர்களும் புதிய பொம்மைகளை வழங்கி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.