சிதம்பரம் நடராஜர் கோவிலில் அறநிலையத் துறையினர் ஆய்வு; செய்தியாளர்களுக்கு அனுமதி மறுப்பு

Chidambaram Nataraja temple inspection by charity department! Denial of access to reporters!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் இந்து சமய அறநிலையத் துறையினர் கோவிலில் உள்ள நகைகள் உள்ளிட்ட ஆபரணங்களை ஆய்வு செய்வதற்காக கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு கோவில் தீட்சிதர்களுக்கு நோட்டீஸ் வழங்கினர். இதற்கு கோவில் தீட்சிதர்கள் தரப்பு எதிர்ப்பு தெரிவித்து அறநிலையத்துறை உயர் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதி வந்தனர்.

இந்த நிலையில், இந்து சமய அறநிலையத் துறையின் உயர் அதிகாரிகள் கொண்ட குழுவினர் கோவிலுக்கு ஆய்வு செய்வதற்காக வருகை தந்தனர். ஆனால், கோவில் தீட்சிதர்கள் அவர்களை அனுமதிக்கவில்லை. இதனால், அப்போது அதிகாரிகள் திரும்பிச் சென்றனர். பின்னர் நடராஜர் கோவில் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என இந்து சமய அறநிலையத் துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. இதில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட புகார்கள் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பதிவு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 22-ஆம் தேதி ஆய்வு செய்ய கோவில் தீட்சிதர்கள் தரப்பில் அனுமதிப்பதாகவும் அவர்கள் கூறி இருந்தனர். இதனைத் தொடர்ந்து திங்கள்கிழமை காலை இந்து சமய அறநிலையத்துறை திருவண்ணாமலை கோவில் இணை ஆணையர் குமரேசன், கடலூர் மாவட்ட இணை ஆணையர் ஜோதி, விழுப்புரம் சிவலிங்கம், திருச்சி தர்மராஜன், திருவண்ணாமலை கோவில் நகை மதிப்பீட்டு வல்லுநர் குமார், விழுப்புரம் குருமூர்த்தி அடங்கிய இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் 10 பேர் கொண்ட குழுவினர் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வருகை தந்தனர். பின்னர் கோவில் நகைகளை ஆய்வு செய்யும் பணிகள் துவங்கியது. இந்நிகழ்வுக்கு கோவில் உள்ளே பத்திரிகையாளர்கள் வரக்கூடாது என தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் அனுமதி மறுக்கப்பட்டது.

Chidambaram
இதையும் படியுங்கள்
Subscribe