/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/chi32_0.jpg)
மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணத்தை வசூலிக்க வலியுறுத்தி,கடந்த 54 நாட்களாக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து அறவழி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் 54-வது நாளான நேற்று (31/01/2021) இந்திய மாணவர் சங்கத்தின் கடலூர் மாவட்டச் செயலாளர் குமரவேல்மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் பூங்குழலி உள்ளிட்டடோர் போராட்டக் களத்தில் மாணவர்களைச் சந்தித்து ஆதரவு தெரிவித்துப் பேசினர். இதனைத் தொடர்ந்து மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளருக்கு மாணவர்கள் சார்பில் புத்தகம் நினைவு பரிசு வழங்கப்பட்டது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/chi43.jpg)
மாணவர்கள் போராட்டத்தின் எதிரொலியாக தமிழக அரசு உயர் கல்வித் துறையில் இருந்து சுகாதாரத்துறைக்கு ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மாற்றப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில்இன்று அல்லது நாளை கட்டணம் குறித்து அரசாணை வெளியிடப்படும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மாணவர்களிடம் உறுதி அளித்துள்ளதால், தற்போது மாணவர்கள் அறவழி போராட்டத்தைக் காத்திருப்பு போராட்டமாக நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)