ADVERTISEMENT

சிதம்பரம் மருத்துவ கல்லூரி மாணவர்கள் அறவழி நூதன போராட்டத்தை காத்திருப்புப் போராட்டமாக அறிவித்துள்ளனர்!

11:11 PM Jan 31, 2021 | suthakar@nakkh…

ADVERTISEMENT

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கடந்த 54 நாட்களாக மற்ற அரசு மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கப்படும் கல்வி கட்டணத்தை சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் வசூலிக்க வலியுறுத்தி தொடர்ந்து அறவழி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இன்று 54 வது நாளில் இந்திய மாணவர் சங்கத்தின் கடலூர் மாவட்ட செயலாளர் குமரவேல், மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் பூங்குழலி உள்ளிட்டவர்கள் போராட்டகளத்தில் மாணவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்து பேசினார்கள். இதனை மாணவர்கள் அனைவரும் கைதட்டி வரவேற்றனர். இதனை தொடர்ந்து மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளருக்கு மாணவர்கள் சார்பில் புத்தகம் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

மாணவர்கள் போராட்டத்தின் எதிரொலியாக தமிழக அரசு உயர் கல்வித் துறையில் இருந்து சுகாதாரத் துறைக்கு மருத்துவமனை மாற்றப் படுவதாக அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் நாளை அல்லது நாளை மறுநாள் கட்டணம் குறித்து அரசாணை வெளியிடப்படும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மாணவர்களிடம் உறுதி அளித்துள்ளதால் தற்போது மாணவர்கள் அறவழி போராட்டத்தை காத்திருப்பு போராட்டமாக நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT