Skip to main content

மருத்துவ மாணவர்களின் போராட்டக் களத்தில் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தப் பேச்சுவார்த்தைத் தோல்வி!

Published on 24/01/2021 | Edited on 24/01/2021

 

 

chidambaram medical college students

தமிழகத்தின் மற்ற அரசு மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கும் கல்விக் கட்டணத்தையே வசூலிக்க வலியுறுத்தி, கடலூர் மாவட்டம், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 45 நாட்களாக  1,300 மருத்துவ மாணவர்கள் தொடர்ந்து 47 நாட்களாக நூதன முறையில் அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்த நிலையில் பல்கலைக்கழக நிர்வாகம் கல்லூரி விடுதியில் மின்சாரம், குடிநீர், உணவு என அனைத்தையும் தடை செய்துள்ளது. இதனால் பாதிப்படைந்த மாணவர்கள் தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.

 

இந்நிலையில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் தலைமையில் பல்கலைகழக துணைவேந்தர் முருகேசன், பதிவாளர் ஞானதேவன், சிதம்பரம் டி.எஸ்.பி. லாமேக், மருத்துவக் கல்லூரி முதல்வர் மிஸ்ரா, கண்காணிப்பாளர் நிர்மலா உள்ளிட்டோர் போராட்டக் களத்தில் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

 

அப்போது, சிதம்பரம் எம்.எல்.ஏ. பாண்டியன், மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு வரும் ஜனவரி 27-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் மணிமண்டபம் திறப்பு நிகழ்ச்சியில் முதல்வர் மற்றும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து நல்ல முடிவு எடுப்பதாக உறுதியாகக் கூறினார். அதனால் மாணவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

 

இதற்கு மாணவர்கள் நாங்கள் அமைதியான முறையில் இங்கே அமர்ந்து இருக்கிறோம் என்றும் மாணவ பிரதிநிதிகள் 5 பேர் மட்டும் சென்னையில் அமைச்சரைச் சந்தித்து நல்ல முடிவை அறிவித்தால் நாங்கள் நிரந்தரமாகப் போராட்டத்தை கைவிடுகிறோம் என்றனர். ஆனால் எம்.எல்.ஏ. போராட்டத்தை கைவிட்டால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு அழைத்து செல்வதாகக் கூறினார் அதனை மாணவர்கள் ஏற்கவில்லை. இதனால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதனைத் தொடர்ந்து மீண்டும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  

 

இந்த நிலையில் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் மாநில துணைத்தலைவர் புலிகேசி, மாவட்ட செயலாளர் குலோத்துங்கன் உள்ளிட்ட நிர்வாகிகள் போராட்டக் களத்திற்கு நேரில் சென்று மாணவர்களைச் சந்தித்துப் பேசினர். பின்னர் அவர்கள் அரசு சரியான முடிவு எடுக்கவில்லை என்றால் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியில் பணியாற்றும் 14,000 மருத்துவர்களும் ஒரு முடிவு எடுக்கும் சூழ்நிலை உருவாகும் என  கூறியுள்ளனர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரத்தில் இ.பி.எஸ். பிரச்சாரம்; பொதுக்கூட்ட பணிகள் தீவிரம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Edappadi Palaniswami is campaigning in Chidambaram on 31st

சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடுகிறார். அதேபோல் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க. சார்பில் வேலூர் மாநகராட்சி முன்னாள் மேயர் கார்த்தியாயினி போட்டியிடுகிறார்.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் வேட்பாளர் சந்திரகாசன் போட்டியிடுகிறார். இவருக்கு வாக்கு கேட்டு வரும் 31 ஆம் தேதி சிதம்பரம் புறவழிச் சாலை பகுதியில் அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

இதனையொட்டி பொதுக்கூட்டம் மேடை அமைப்பதற்காகப் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சிதம்பரம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ. பாண்டியன், புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருள்மொழி தேவன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story

“எனதருமை மாணவச் செல்வங்களே...” - முதல்வர் வாழ்த்து

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Chief Minister Stalin congratulates students appearing for 10th public exam

தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள், தனித் தேர்வர்கள், சிறைக் கைதிகள் என மொத்தம் 9.38 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.

முதல்நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்கள் தேர்வு நடைபெறவுள்ளது.  செல்போன், உள்ளிட்ட மின்னணு சாதனப் பொருட்களைத் தேர்வு அறைக்குள் கொண்டு செல்லக் கூடாது என்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முறைகேடுகளைத் தவிர்க்க மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதவுள்ள எனதருமை மாணவச் செல்வங்களே... All the best!  நீங்கள் பதற்றமின்றித் தேர்வை எதிர்கொள்ளத்தான் வினாத்தாளைப் படித்துப் பார்க்க முதலில் 10 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இதனை மற்றுமொரு தேர்வாகக் கருதி நம்பிக்கையோடு எழுதி வெற்றி பெறுங்கள். பெற்றோர்களும் உங்கள் பிள்ளைகள் உரிய நேரத்தில் தேர்வு மையத்துக்குச் சென்றிடுவதை உறுதி செய்யுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.