சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் சிதம்பரம், பரங்கிப்பேட்டை, காட்டுமன்னார்கோவில்,ஆயங்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 24 பேருக்கு கரோனா தொற்று உள்ளதா என ஆய்வு செய்வதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

chidambaram medical college nurse isolation ward

இதில் ஒருவரை வெண்டிலேட்டரில் வைத்து பாதுகாத்து வருகிறார்கள். இந்த நிலையில் இதில் பணிபுரியும் செவிலியர் மற்றும் ஊழியர்களுக்குப் பாதுகாப்பு உடை மருத்துவப் பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படவில்லை எனவும், முகக்கவசம் மற்றும் கையுறை மட்டும் அணிந்து கொண்டு பணியாற்ற வலியுறுத்துவதால் 50- க்கும் மேற்பட்ட செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் பணிக்குச் செல்லாமல் மருத்துவமனை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்குச் செல்லும் வழியில் அனைவரும் பணியைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

chidambaram medical college nurse isolation ward

இதுகுறித்து பல்கலைக்கழகப் பதிவாளர் கிருஷ்ணமோகன் "அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. அவர்களுக்கு மருத்துவக் கண்காணிப்பாளர் மூலம் உடனடியாகத் தேவையான அனைத்து உயிர்காக்கும் பொருள்களும் வழங்கப்படும்" என்றார்.