Chidambaram Medical College doctors, staff struggle

Advertisment

சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை, அரசு கடலூர் பல் மருத்துவக்கல்லூரி மற்றும் அரசு கடலூர் செவிலியர் கல்லூரி மருத்துவர்கள், ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத ஊழியர்கள் கடந்த மாத ஊதியம் வழங்காததைக்கண்டித்து மாத ஊதியம், ஊக்கத்தொகை மாதந்தோறும் வழங்கக் கோரியும்,முழுமையாக அரசு கையகப்படுத்தும் அரசாணை வெளியிட வலியுறுத்தியும் மருத்துவமனை முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் வி.சிவகுருநாதன் தலைமை வகித்தார். கூட்டத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் சௌ.மனோகரன், இளங்கோ, செல்வராஜ், ரவி, ஊழியர் சங்க பொதுச் செயலாளர் பழனிவேல் மற்றும் சங்க நிர்வாகிகள், ஊழியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் பெருந்திரளாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஊழியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றப்படவில்லை என்றால் அடுத்தகட்டதொடர் போராட்டம் நடத்தப்படும் என்று பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர் கூட்டமைப்பு‌ அறிவித்தது.