கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரில் உள்ள ஞானப்பிரகாசர் குளம், ஆயிகுளம்,குமரன் குளம், நாகச்சேரி குளம், பெரிய அண்ணாகுளம், ஒமக்குளம், தச்சன்குளம், பாலமான் குளம் உள்ளிட்ட 8 குளங்களை தூர்வாரி புனரமைக்க சிதம்பரம் நகராட்சிக்கும், EFI தொண்டு நிறுவனத்திற்கும் இடையே மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், சிதம்பரம் சார் ஆட்சியர் விசு மஹாஜன் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/krisu222.jpg)
குளக்கரையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டவர்களுக்கு விரைவில் வீடுகள் வழங்குவதற்கான பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அப்போது சிதம்பரம் நகராட்சி ஆணையர் சுரேந்தர்ஷா, இஎப்ஐ தொண்டு நிறுவன நிர்வாகி அருண் கிருஷ்ணமூர்த்தி உடன் இருந்தனர்.
Follow Us