/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/muslim-art.jpg)
கடலூர்மாவட்டம்கிள்ளையில்ஆண்டுதோறும்மாசிமகத் திருவிழாசிறப்பாகநடைபெறுவதுவழக்கம். இதில் கிள்ளை மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராமங்களில்இருந்து 100க்கும்மேற்பட்டசாமி சிலைகள் மேளதாளம் முழங்க கிள்ளைகடற்கரை பகுதிக்குகொண்டுவரப்பட்டுதீர்த்தவாரி நடைபெறும். இந்தநிலையில், நேற்றுகிள்ளையில் மாசிமகவிழாநடைபெற்றது.
கிள்ளைமற்றும்அதனைச் சுற்றியுள்ளகிராமங்களில்இருந்துஏராளமானசுவாமி சிலைகள்கிள்ளைகடற்கரைக்குகொண்டுவரப்பட்டுதீர்த்தவாரிநடைபெற்றது.மாசிமகத்தை முன்னிட்டுஏராளமானபொதுமக்கள்கலந்துகொண்டுசாமிதரிசனம்செய்தனர். பலர்கடலில் குளித்துவிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம்தந்தனர். ஆண்டுதோறும்கிள்ளை மாசிமகத்திருவிழாவிற்குஸ்ரீமுஷ்ணம் பூவராக சாமிதீர்த்தவாரிக்குவருவது வழக்கம். அதேபோல் செவ்வாயன்றுஸ்ரீமுஷ்ணம்பூவராகசாமிகடற்கரைக்கு வழக்கம்போலதீர்த்தவாரிக்கு வந்தது. கிள்ளை தைக்கால்பகுதியில் தர்கா டிரஸ்ட் நிர்வாகிசையதுசக்காப் தலைமையில்ஏராளமான இஸ்லாமியப் பிரமுகர்கள்வரவேற்பளித்து பட்டு சாத்தினார்கள்.
பின்னர்பூவராக சாமி எடுத்து வந்த பிரசாதத்தை அதேபகுதியில்இருந்ததர்காவிற்குஅனைவரும்சென்று உலகநன்மைக்காகவும், மக்களின் நலனுக்காகவும் பாத்தியாஓதப்பட்டது.அனைவருக்கும்பிரசாதமாக எடுத்து வரப்பட்ட சர்க்கரைவழங்கப்பட்டது.தர்காவில்பாத்தியா ஓதிய பொருட்கள்ஸ்ரீமுஷ்ணம் சாமி கோயில்அர்ச்சகர்களிடம்வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கிள்ளைபேரூராட்சிதலைவர்மல்லிகா, துணைத் தலைவர் கிள்ளை ரவீந்திரன்,பேரூராட்சிஉறுப்பினர்கள்,செயல்அலுவலர்கள் ஸ்ரீமுஷ்ணம் பூவராக சாமி கோயில்செல்வமணி, சிதம்பரம் அனந்தீஸ்வரன்கோயில்ராஜ்குமார், விவசாய சங்க தலைவர்கள் ரங்கநாயகி, கண்ணன் மற்றும்பொதுமக்கள்கலந்துகொண்டனர்.
கிள்ளைதர்காடிரஸ்டிநிர்வாகிசையதுசக்காப்கூறுகையில், இந்தநிகழ்வுஎங்களதுமுன்னோர்களால்கடந்த1892ஆம்ஆண்டுமுதல்செய்யப்பட்டுவருகிறது. அதனைத்தொடர்ந்துநாங்களும்செய்து வருகிறோம்.பூவராக சாமிவரும்போது மேளதாளங்களுடன்வரவேற்று அவர்கள்எடுத்து வரும்பிரசாதத்தை பெற்றுக்கொண்டு அதனைதர்காவில்வைத்து பாத்தியாஓதிஇந்தநாட்டில்அனைவரும் சுபிட்சமாகஇருக்கும் வகையில் அனைவரும்பிரார்த்தனைமேற்கொண்டு அதனைமீண்டும்சாமியிடம் வழங்குவோம் அதனைப் பெற்றுக்கொண்டு சாமி கடற்கரைக்குசெல்வார். கிள்ளைபேரூராட்சிமன்றதுணைத் தலைவரும்திமுக மாநிலசெயற்குழுஉறுப்பினருமான கிள்ளைரவீந்திரன் கூறுகையில், "இது நூற்றாண்டு காலமாகநடைபெற்றுவரும்மதம் கடந்த மாசிமகமாக கிள்ளையில் நடைபெற்று வருகிறது. இதனை கிள்ளை பேரூராட்சிநிர்வாகம்சார்பில்வரவேற்றுவழிஅனுப்பிவைப்பதில் பெருமைகொள்கிறோம்" எனக் கூறுகிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)