Skip to main content

100 நாள் வேலையில் முறைகேடு; போராட்டத்தில் குதித்த மக்கள்

Published on 25/01/2023 | Edited on 25/01/2023

 

chidambaram keerapalayam mgnrega workers issue farmers participated

 

சிதம்பரம் அருகே 100 நாள் வேலைத் திட்டத்தில் முறைகேடுகள் நடைபெறுவதாகக் கூறி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

சிதம்பரம் அருகே உள்ள கீரப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் சிதம்பரம் வட்டம் கலியமலை ஊராட்சியில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் சம்பளம் வழங்குவதில் முறைகேடு நடைபெறுகிறது என்றும், வேலை வழங்காமலேயே கைரேகையை வைக்க கூறி பெரும் தொகையை கமிஷனாக கலியமலை ஊராட்சி நிர்வாகம் பெற்று  வருகிறது. இதற்கு கீரப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துணை போவதை கண்டித்தும், கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து வார்டு மக்களுக்கும் 100 நாள் வேலை வழங்க வேண்டும். அனைத்து ஊராட்சிகளில் உள்ள குளங்களை தூர்வார வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

 

இந்த போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க கீரப்பாளையம் ஒன்றிய துணைத் தலைவர் சிவனேசன் தலைமை தாங்கினார். இதில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு, மாவட்டச் செயலாளர் பிரகாஷ், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் சரவணன், மாவட்ட இணை செயலாளர் வாஞ்சிநாதன், விவசாய தொழிலாளர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் செல்லையா, மாநிலத் துணைத் தலைவர் நெடுஞ்சேரலாதன், விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் தர்மதுரை, ஒன்றிய துணைத் தலைவர் வாசுதேவன் உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தை கண்டித்து முழக்கங்களை எழுப்பினார்கள். இதனைத் தொடர்ந்து தங்களின்  கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தனர். மேலும் இதற்கு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அனைத்து ஊராட்சியிலும் பாதிக்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான மக்களை திரட்டி ஒன்றிய அலுவலகத்தை பூட்டு போடும் போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியாவின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்கிய நாள்” - தொல்.திருமாவளவன்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
today India redemption started writing from Tamil Nadu says Thirumavalavan

சிதம்பரம் நடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்குட்பட்ட அவரது சொந்த ஊரான அங்கனூர்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனது தாயாருடன் வாக்களித்தார்.

இதனைதொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே வந்து பேசுகையில், இந்த தேர்தல் இரண்டு கட்சிகளுக்கு எதிரான தேர்தல் அல்ல. சங்‌பரிவார் மற்றும் இந்திய மக்களுக்கு இடையேயான தர்ம யுத்தம்.  நாட்டு மக்கள் வெற்றிபெற வேண்டுமென்பதற்காக இந்தியா கூட்டணி மக்கள் பக்கம் நிற்கிறது.‌ இந்திய அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும்.‌ நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.‌தமிழ்நாட்டில் 40க்கும் 40 இடங்களிலும் வெற்றி பெறும்.

கூட்டணி பலம், திமுக அரசின் மூன்றாண்டுகள் நலத்திட்டங்கள், இந்தியா கூட்டணியின் நோக்கங்களால் எங்கள் அணி மாபெரும் வெற்றி பெறும். இந்த தேசத்தின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்குகிறோம் என்பதை அறிவிக்கும் நாள் இன்று. தமிழ்நாட்டுப் பெண்கள் திமுக அரசின் மீது நன்மதிப்பை கொண்டுள்ளனர். டெல்லியில் பாஜக வென்றால் மாநில அரசுகளை கலைக்கும் நிலை வரலாம், அப்படி நடந்தால் மகளிர் உரிமைத் தொகைக்கு ஆபத்து வரலாம்.‌ தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும். ஆந்திரா, தெலுங்கானா கர்நாடகா மற்றும் கேரளாவில் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். சிதம்பரம் தொகுதியில் பானை சின்னம் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்” என்றார்.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.