கரோனா தொற்று நோய் பரவாமல் தடுக்க சிதம்பரம் பத்திரிகையாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி சிதம்பரம் பஸ் நிலையத்தில் இன்று (24.03.20) நடந்தது. இந்நிகழ்ச்சியில் சிதம்பரம் டிஎஸ்பி.கார்த்திகேயன், சிதம்பரம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர். தமிழரசன், தமிழ்நாடு மருந்தாளுநர்கள் சங்க மாநிலச்செயலாளர் வெங்கடசுந்தரம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தனர்.

Advertisment

 Chidambaram Journalists Advancement Association - Free face mask, Soaps

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

பின்னர் சிதம்பரம் பஸ் நிலையத்தில் பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள், மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாக முகக்கவசம் மற்றும் கை கழுவுவதற்காக இலவச சோப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், சிதம்பரம் நகர காவல் ஆய்வாளர் முருகேசன், மொத்த மருந்து வணிகர் சங்கத் தலைவர் பிரகாஷ், மெடிக்கல் உரிமையாளர் சங்கத் தலைவர் கலியபெருமாள், செயலாளர் பாலமுருகன், பொருளாளர் கண்ணன், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டம் கடலூர் மண்டல துணை மேலாளர் செல்வம், உதவி பொறியாளர் பாலசுப்பிரமணியன், கிளை மேலாளர்கள் மோகனசுந்தரம், அசோக்குமார், முன்பதிவு அலுவலர் ஜெயக்குமார், சிதம்பரம் பத்திரிகையாளர்கள் முன்னேற்ற சங்க மூத்த பத்திரிகையாளர் சுந்தர்ராஜன், சங்கத்தலைவர் தலைவர் செந்தில்குமார், செயலாளர் ரமேஷ், துணைத் தலைவர் காளிதாஸ், துணை செயலாளர் வீரமணி, நிர்வாக குழு உறுப்பினர்கள் துரை, ராஜி, பழனிவேல், கண்ணதாசன் மற்றும் ராஜா, மாறன், பாலாஜி, டி.வி ராஜா,புகைப்படக் கலைஞர் கருணாகரன் உள்ளிட்ட சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.