Advertisment

சிதம்பரம் புறவழிச்சாலை விபத்தில் 4 பேர் உயிரிழப்பு! 

chidambaram highway incident police investigation

Advertisment

கடலூர் மாவட்டம், சிதம்பரம் புறவழிச்சாலை கூத்தன்கோவில் கிராமத்தின் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது சேலம் பகுதியில் இருந்து டைல்ஸ் ஏற்றி வந்த லாரி ஒன்று இன்று (25/05/2022) அதிகாலை மோதியுள்ளது. இதில் லாரியின் முன்பகுதியில் அமர்ந்து பயணம் செய்த சேலம் பகுதி தம்மம்பட்டியைச் சேர்ந்த செல்வகுமார் (வயது 38) சீர்காழி வட்டம் மாதானம் பகுதியைச் சேர்ந்த கற்பகவல்லி (வயது 27), செல்வகுமாரின் குழந்தை மிதுன் (வயது 3), சேலம் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் நகுலேஸ்வரன் ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் லாரி பின்னால் அமர்ந்திருந்த மூன்று பேர் பலத்த காயமடைந்த நிலையில், ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைபெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உடல்களை காவல்துறையினர், அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

சிதம்பரம் புறவழிச்சாலையில் அதிகாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chidambaram incident
இதையும் படியுங்கள்
Subscribe