சிதம்பரம் அரசு மருத்துவமனையில் மகப்பேறு தீவிர சிகிச்சை பிரிவு 1 கோடியே 20 லட்சம் செலவில் புதியதாக கட்டப்பட்டது. இதனை சென்னையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

Advertisment

 Chidambaram Government Hospital Rs 1.20 crores maternity intensive care unit

இந்நிகழ்ச்சியை மருத்துவமனையில் தலைமை மருத்துவ அதிகாரி தமிழரசன், மருத்துவர் அசோக் பாஸ்கர் உள்ளிட்ட மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் குத்துவிளக்கேற்றி வரவேற்றனர். மேலும் இம்மருத்துவ பிரிவுக்கு சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ 15 லட்சத்தில் கட்டில், படுக்கை, மேஜை, நாற்காலி உள்ளிட்ட மருத்துவ தளவாட பொருட்களை வழங்கியுள்ளார். இதனை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.

 Chidambaram Government Hospital Rs 1.20 crores maternity intensive care unit

Advertisment

இதுகுறித்து தலைமை மருத்துவ அதிகாரி தமிழரசன் கூறுகையில், மகப்பேறு தீவிர சிகிச்சைப் பிரிவு இல்லாததால் பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கர்ப்பிணிப் பெண்களை பரிந்துரை செய்து வந்தோம் தற்போது நம்மூரில் இது தொடங்கப்பட்டுள்ளது. வரவேற்கதக்கது. சிதம்பரம் மற்றும் 30 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இது அமைந்துள்ளது. எனவே இதனை பொதுமக்கள் நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.