சிதம்பரம் அரசு காமராஜர் மருத்துவமனைக்கு சிதம்பரம் ரோட்டரி சங்கங்கள் சார்பாக ரூ 2 லட்சம் மதிப்பிலான 47 லிட்டர் கொள்ளவு கொண்ட ஆக்சிஜன் சிலிண்டர் உருளைகள் 10 எண்ணிக்கைகள் வழங்கும் நிகழ்ச்சி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இதில் மண்டல துணை ஆளுநர் முஹம்மது யாசின், திட்ட ஒருங்கிணைப்பாளரும், மண்டல செயலாளருமான மஹபூப் உசேன் ஆகியோர் சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலனிடம் வழங்கினர். நிகழ்ச்சியில் மருத்துவமனை முதுநிலை மருத்துவ அலுவலர் அசோக் பாஸ்கர், சிதம்பரம் ரோட்டரி சங்க தலைவர் பாபு, சிதம்பரம் மிட்டவுன் ரோட்டரி சங்க தலைவர் மோத்திலால், சிதம்பரம் டெம்பிள் டவுன் ரோட்டரி சங்க தலைவர் சீனிவாசன், சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்க தேர்வு தலைவர் ஜி.சீனுவாசன், சத்திய சாயி சேவா சங்க சந்திரசேகர் மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.