Advertisment

அரசு மருத்துவமனையில் அலட்சியம் - திடீர் போராட்டத்தில் இறங்கிய மக்கள்!

hkj

சிதம்பரம் அரசு மருத்துவமனை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு இணையாக இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையை நம்பி சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளில் இருந்து வெளிபுற நோயாளியாக 1000-த்திற்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கிறார்கள். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் மணிவாசகம் நாய்கடி ஊசி போட்டுகொள்வதற்காக வந்துள்ளார்.

Advertisment

அப்போது மருத்துவமனை ஊழியர்கள் நாய்கடி ஊசி இல்லை என்று கூறியுள்ளனர். இதுகுறித்து அவர் மருத்துவமனை ஊழியர்களிடம் கேட்டுகொண்டிருந்தபோது நாய்கடி ஊசிக்காக கடந்த ஒருவாரகாலமாக தினந்தோறும் மருத்துவமனைக்கு வருவதாக மருத்துவமனையில் இருந்த 5-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூறியுள்ளனர்.

Advertisment

இதனையடுத்து இவரது தலைமையில் கட்சியின் சிதம்பரம் நகர செயலாளர் தமிமுன் அன்சாரி, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சேகர் மற்றும் நாய்கடிக்கு ஊசி போடவந்த பொதுமக்கள் என பத்துக்கும் மேற்பட்டவர்கள் சிதம்பரம் அரசு மருத்துவமனை முன்பு உள்ள நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனை அறிந்த சிதம்பரம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிடச் செய்தனர். பின்னர் சிதம்பரம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் ரவி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் விரைவில் நாய் கடிக்கு மருந்து கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் 20 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

protest Chidambaram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe