Advertisment

 1 கிராம் தங்கத்தில் பாராளுமன்ற கட்டிட வடிவம் அமைத்து இளைஞர் சாதனை

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்த பொற்கொல்லர் முத்துக்குமரன் 1 கிராம் 420 மில்லி கிராம் தங்கத்தில் இந்திய பராளுமன்ற கட்டிட வடிவமைப்பு செய்து சாதனை படைத்துள்ளார்.

Advertisment

g

சிதம்பரம் விஸ்வநாதன் தெருவில் வசிப்பவர் ஜெயபால் பொற்கொல்லர். இவரது மகன் முத்துக்குமரன் (38). 9ம் வகுப்பு வரை படித்துள்ள இவர் 12 வயதிலிருந்து தந்தையுடன் சேர்ந்து கவரிங் மற்றும் தங்க நகைகள் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற துடிப்பில் குறைந்த அளவு தங்கத்தில் பல்வேறு சிறிய நகை மற்றும் பொருள்களை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

Advertisment

இவர் தற்போது நுறு சதுவீத வாக்கை வலிறுத்தி 1 கிராம் 420 மில்லி தங்கத்தில் இந்திய நாடாளுமன்ற கட்டிட வடிவமைப்பை உருவாக்கியுள்ளார். 120 மில்லி தங்கத்தில் பெண் குழந்தை கையில் 100 சதவீத வாக்கை வலியுறுத்தியும், எங்கள் வாக்கு விற்பனை இல்லை என்ற ஆங்கில சொல் பதாகையுடனான உருவத்தையும், 20 மில்லி தங்கத்தில் மை வைத்த விரல் உருவத்தையும் செய்து சாதனை படைத்துள்ளார்.

g

கடந்த 2018 ஆண்டு புகழ்பெற்ற சவுதியில் உள்ள பள்ளி வாசல் மெக்கா,மதினா உருவங்களை 640 மில்லி கிராமில் 1 செ.மீட்டர் உயரத்தில் தங்கத்திலும், மேலும் அதனுடன் அல்லாஹ் வார்த்தை 10 மில்லி கிராம் தங்கத்தில் செய்துள்ளார்.

இவர் 20 வருடங்களாக நகை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 2018 ஜனவரி மாதம் 28ம் தேதி தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பெண் குழந்தைகளை காப்போம், கற்பிப்போம் என்ற தலைப்பில் 850 மில்லி கிராம் தங்கத்தில் விழிப்புணர்வு உருவங்களை செய்துள்ளார். இதற்கு முன்பு குறைந்த அளவு தங்கத்தில் துய்மை இந்தியா திட்டம், புதுதில்லி செங்கோட்டை, சிதம்பரம் நடராஜர் கோயில் பொற்சபை, உலக கோப்பை, தங்க ஊஞ்தல், தமிழக சட்டப்பேரவை முகப்பு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவம், தாஜ்மஹால் என சிறிய அளவில் உருவங்களை தங்கத்தில் செய்துள்ளார். இவருக்கு அகில இந்திய நகை வியாபாரிகள் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற விழாவில் பொற்கொல்லர் மாமணி விருது வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து முத்துகுமரன் கூறுகையில், சிறிய அளவிலான தங்கத்தை வைத்து உலக புகழ் பெற்ற இடங்கள், தலைவர்கள், அரசின் திட்டங்கள், கோவில் முதலியவற்றை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இவைகளை செய்துள்ளேன். இது போல மேலும் பல வடிவமைப்புகளை செய்து சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபடுவேன் என்றார்.

Chidambaram is a goldsmith Muthukumaran
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe