கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த பரங்கிப்பேட்டை அருகே சாமியார்பேட்டை -கடல் பகுதியில் ஞாயிறுக்கிழமை (08.12.2019) அதிகாலை சாமியார்பேட்டை சுனாமி குடியிருப்பு பகுதியில் இருந்து மீன்பிடிக்க செல்வமணி என்பவருடைய பைபர் படகில் அதே பகுதியை சார்ந்த மீனவர்கள் சந்திரன், மோகன், செல்வராஜ், ஏழுமலை,தேவராஜ் ஆகியோர் சென்றுள்ளனர்.
அலையின் சீற்றம் அதிகமாக இருந்ததால் கடலில் படக்கு கவிழ்ந்துள்ளது. இதில் அனைவரும் சாமார்தியமாக செயல்பட்டு சிறுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். படகு என்ஜின் மட்டும் தண்ணீரில் முழ்கியுள்ளது.