Chidambaram

Advertisment

கடலூர் மாவட்டம் சிதம்பரம் டி.எஸ்.பி. ஆக பணியாற்றிய கார்த்திகேயன் விழுப்புரம் காவல் சரக காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டம் சமூக நீதி மற்றும் மனித உரிமை மீறல் டி.எஸ்.பி.யாக பணியாற்றிவரும் அகஸ்டின் ஜோஸ்வா லாமேக் சிதம்பரம் டி.எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே சிதம்பரம் நகர காவல் ஆய்வாளராக பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு சிதம்பரம் நகர பொதுமக்கள் வணிகர்கள் சமூக ஆர்வலர்கள் என அனைத்துத் தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.