Chidambaram DSP congratulates 'Usu' martial arts gold medalist

Advertisment

சிதம்பரம் ஆறுமுக நாவலர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவர் தர்ஷன். இவர் ஆறாம் வகுப்பிலிருந்து 'உசூ' எனும் தற்காப்பு கலையை கற்று வருகிறார். இவர் அந்த தற்காப்பு கலையில் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றுப் பல பதக்கங்களையும், கேடயங்களையும் பெற்றுள்ளார்.

இந்தநிலையில் கோயம்புத்தூரில் கடந்த 18, 19-ஆம் தேதிகளில் மாநில அளவில் நடைபெற்ற 'உசூ' போட்டியில் வெற்றிபெற்று தங்கம் பதக்கம் வென்றுள்ளார். மேலும் அகில இந்திய அளவில் நடைபெறும் போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளார். இதனை அறிந்த சிதம்பரம் டிஎஸ்பி ரமேஷ் ராஜ் அவரது அலுவலகத்திற்கு மாணவனை அழைத்து சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். இவருடன் 'உசூ' தற்காப்பு கலையின் மாஸ்டர் விக்னேஷ், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் பாக்யராஜ், மாணவனின் பெற்றோர் விஜயகுமார், உள்ளிட்ட உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உடன் இருந்தனர்.