
சிதம்பரம் அண்ணாமலை நகர் ஓ.பி மெயின் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அண்ணாமலை நகர் சிறப்பு நிலை பேரூராட்சிக்கு திமுக சார்பில் வார்டு உறுப்பினர் பொறுப்பிற்குப் போட்டியிடும் திமுகவினர் விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ஜெம்ஸ் விஜயராகவன், குமராட்சி திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சங்கர், நகரசெயலாளர் முத்துக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு விருப்ப மனுவைப் பெற்றுக்கொண்டனர். இதில் வார்டு 5-க்கு வார்டு உறுப்பினராக போட்டியிடுவதற்கு திமுக நகர பொருளாளர் பழனி விருப்ப மனு வழங்கினார். அதேபோல் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுக்கும் திமுகவை சேர்ந்த நிர்வாகிகள் ஆனந்தன், தங்க அன்பரசன், விஜியலட்சுமி, சீத்தாலட்சுமி, அருள்வேலன், பழமலைநாதன் ஆகிய திமுகவினர் விருப்பம னுவை வழங்கினார்கள்.
இதே போல் சிதம்பரம் தெற்குவீதியில் சிதம்பரம் நகராட்சியிலுள்ள 33 வார்டுகளிலும் வார்டு உறுப்பினராக போட்டியிடும் திமுகவினரிடம் நகர செயலாளர் செந்தில்குமார், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் மதியழகன் ஆகியோர் விருப்ப மனுக்களை பெற்றுக்கொண்டார். இதில் 20-வது வார்டுக்கு முன்னாள் திமுக நகர்மன்ற உறுப்பினர் வெங்கடேசன் விருப்ப மனுவை வழங்கினார். இதே போல் 33 வார்டுக்கும் திமுகவினர் விருப்பமனுவை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சிகளில் சிதம்பரம் நகர திமுக துணைசெயலாளர் பாலசுப்ரமணியன், திமுக முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் மணி உள்ளிட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்.