சிதம்பரம் அருகே உள்ள சேத்தியாதோப்பு வட சென்னிநாதம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் (62). இவர் ஒய்வு பெற்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆவர். இவர் புதன்கிழமை அவருடைய இருசக்கர வாகனத்தில் சேத்தியாதோப்பில் இருந்து காட்டுமன்னார்கோவில்- சிதம்பரம் சாலையில் நாஞ்சலூர் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த போது சாலையில் உள்ள பள்ளத்தில் நிலை தடுமாறி ஜெயராமன் விழுந்ததாக கூறப்படுகிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sub inspector.jpg)
அப்போது அவர் பின்னாடி வந்த டிராக்டர் ஜெயராமனின் மீது ஏறி சென்றது. இதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ஜெயராமன் உயிரிழந்தார். இது குறித்த தகவலறிந்த சிதம்பரம். தாலுகா போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் நாகராஜன் சம்பவ இடத்திற்கு விரைந்து, ஜெயராமனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன. இறந்த ஜெயராமன் காட்டுமன்னார்கோவில், சேத்தியாத்தோப்பு காவல் நிலையங்களில் பணிபுரிந்தாக காவல்துறையினர் கூறுகிறார்கள்.
Follow Us