Skip to main content

சிதம்பரத்தில் சி.எஸ். ஜெயராமன் நூற்றாண்டு விழா

Published on 29/04/2018 | Edited on 29/04/2018
chidambaram jeyaraman

 

முத்தமிழ் இசைச்சித்தர் என்று அழைக்கப்படும் சிதம்பரம் எஸ் ஜெயராமனுக்கு சிதம்பரம் நகரில் அவர் வாழ்ந்த இடமான விளங்கியம்மன் கோயில் தெருவில் உள்ள தனியார் மண்டபத்தில் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் அவருடைய மகள் சிவகாமசுந்தரி மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் விளங்கியம்மன் கோயில் தெரு முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் ராஜன் உள்ளிட்ட நகரின் முக்கிய பிரமுகர்கள் சிலபேர் மட்டும் கலந்து கொண்டனர்.

 

விழாவில் ஜெயராமனின் நூற்றாண்டு விழா மலரை அவருடைய மகள் வெளியிட, சிதம்பரம் நகர பகுதியை சார்ந்த மருத்துவர் நடராஜன், நடராஜர் கோயில் தீட்சிதர் ஐயப்பன் உள்ளிட்டவர்கள் பெற்றுகொண்டனர். பின்னர் அவர் வாழ்ந்த காலத்தில் அவருடன் பழகியவர்கள் மலரும் நினைவுகளை நினைவுகூர்ந்து பேசினார்கள்.  அப்போது பலர் அவரது நூற்றாண்டு விழாவை குறுகிய வட்டத்தில் நடத்த கூடாது. அவரது கீர்த்தணைகளை இசைகல்லூரி பாடபுத்தகத்தில் சேர்க்க வேண்டும், ஒவ்வொரு ஆண்டும் அவரது குடும்ப உறுப்பினர்கள் விழா எடுக்கவில்லை என்றாலும் அவர் மீதும், இசையிலும் பற்றுகொண்டவர்கள், சிதம்பரம் நகர மக்கள் உள்ளிட்டவர்களை அனுகி உதவி பெற்று பெரிய விழாவாக எடுக்கவேண்டும் என்று கூறினார்கள். 

 

இதனிடையே சிதம்பரம் நடராஜர் கோயிலில் மூன்று நாட்கள் இயல்,இசை,நாடகம் என்ற தலைப்பில் விழா எடுக்கலாம் என்று நடராஜர் கோயில் தீட்சிதர் ஐயப்பன் உறுதி கூறினார். இதனை அனைவரும் ஏற்றுகொண்டனர். நிகழ்ச்சியின் இடை இடையே அவர் பாடிய பாடல்கள் பாடப்பட்டது. கடந்த ஐனவரி 6-ந்தேதி சென்னையில் நூற்றாண்டு விழா நடைபெற்று உள்ளது. இதில் பி.சுசிலா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்தநிலையில் அவர் வாழ்ந்த இடத்தில் நூற்றாண்டு விழா நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடதக்கது. இதனை தொடர்ந்து தஞ்சையிலும் நூற்றாண்டு விழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது என்கிறார்கள்.

சார்ந்த செய்திகள்