Advertisment

கார்டூன் விவகாரம்... திருமாவளவனுக்கு மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவு

Chidambaram

Advertisment

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவனை இழிவுபடுத்தும் விதமாக ஓவியர் வர்மா என்பவர் ஓவியம் ஒன்றை வரைந்து வெளியிட்டார். இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரமேஷ் பாபு சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் மீது சாதிய வன்மத்துடம் கார்டூன் வரைந்திருக்கும் வர்மா எனும் நபரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும் அவர் கூறுகையில், கருத்து சுதந்திரத்திற்கு ஒரு எல்லை உண்டு. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதை பொறுத்துக்கொள்ள முடியாததால் இதுபோன்ற வன்மத்தை காட்டியுள்ளார். எனவே தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்தார்.

Thirumavalavan Chidambaram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe