Published on 13/11/2021 | Edited on 13/11/2021

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினரும், நீடமங்கலம் ஒன்றிய செயலாளருமான தமிழார்வன் சமூகவிரோதிகளால் சமீபத்தில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை கண்டித்து சிதம்பரம் நகர இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்பாட்டத்திற்கு கட்சியின் நகர செயலாளர் தமிம்முன்அன்சாரி தலைமை தாங்கினார். மாநில நிர்வாககுழு உறுப்பினர் மணிவாசகம், மாவட்ட நிர்வாககுழு உறுப்பினர் சேகர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, சிதம்பரம் நகர செயலாளர் ராஜா, நகர்குழு ஜின்னா உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டு படுகொலை செய்ததை கண்டித்தும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.