Advertisment

சிதம்பரம் மருத்துவமனைகளில் 57 பேர் கரோனா பாதிப்பிலிருந்து குணம்!

  Chidambaram - corona virus

கடலூர் மாவட்டத்தில் இதுவரை 413 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு, அவர்களுக்கு சிதம்பரம், கடலூர், விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவகல்லூரிகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

Advertisment

இந்த நிலையில் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 30 பேரும், ராஜா முத்தையா மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 27 பேரும் சிகிச்சை முடிந்து பூரண குணம் அடைந்து வீடு திரும்பினர்.

Advertisment

சிதம்பரம் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிதம்பரம் வட்டாட்சியர் ஹரிதாஸ், மருத்துவமனை தலைமை மருத்துவர் அசோக்பாஸ்கர் உள்ளிட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டு அவர்களுக்கு அனைவருக்கும் தலா 10 கிலோ அரிசி, காய்கறி, மதியஉணவு, தினந்தோறும் குடிக்க கபசுரக் குடிநீர், சத்து மாத்திரைகள் உள்ளிட்ட தொகுப்புகளை வழங்கி கைதட்டி மகிழ்ச்சி தெரிவித்து அனுப்பி வைத்தனர்.

அதேபோல் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வட்டாட்சியர் ஹரிதாஸ், மருத்துவமனை முதல்வர் ராஜ்குமார், கண்காணிப்பாளர் சண்முகம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு அனைவரையும் கைதட்டி வீட்டுக்கு அனுப்பிவைத்தனர். இவர்களை மாவட்ட நிர்வாகம் இரு பேருந்து ஏற்பாடு செய்து சமூக இடைவெளியுடன் அமரவைத்து அவர்களின் வீட்டுக்கே அழைத்து சென்று விடுவதற்கான ஏற்பாடுகளை செய்தது. இதனால் நோயளிகள் மருத்துவமனையைவிட்டு வீட்டுக்கு மகிழ்ச்சியுடன் சென்றனர்.

முன்னதாக கடந்த 20 நாட்களுக்கு முன்பு கடலூர் மாவட்டத்தில் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 26 பேர் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

covid 19 corona virus Chidambaram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe