சிதம்பரம் கரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழந்தார்

chidambaram

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடலூர் பகுதியைச் சேர்ந்த 75 வயது முதியவர் சளி, இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல் இருந்ததால் கரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்தார்.

இவரது ரத்த மாதிரி ஆய்வுக்கு அனுப்பபட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை அவருக்கு மூச்சு திணறல் அதிகமாக இருந்ததால் உயிரிழந்துள்ளார். இவரது ரத்த மாதிரி முடிவு இன்னும் வரவில்லை. இந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளது அதே வார்டில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Chidambaram corona virus
இதையும் படியுங்கள்
Subscribe