Advertisment

முதலைகளின் கூடாரமாக மாறிவரும் சிதம்பரம் பகுதி கிராமங்கள்!

சிதம்பரம் பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றுபடுகையில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் முதலைகளின் கூடாறமாக மாறிவருகிறது என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகிறார்.

Advertisment

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பழைய கொள்ளிடம் ஆற்றின் அருகில் கூத்தன் கோயில் கிராமம் இந்த கிராமத்தில் கடந்த இரண்டு நாட்களாக வீராணத்தில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீரில் அடித்து வரப்பட்ட 10 அடி நீளமுள்ள 800 கிலோ எடையுள்ள முதலை ஊருக்குள் புகுந்து வாய்க்காலில் கிடப்பதாக தகவலின் பேரில் சிதம்பரம் வனத்துறையினர் தேடினர். கிடைக்கவில்லை இதனைதொடர்ந்து அந்தபகுதி இளைஞர்களை கொண்டு தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர். அப்போது மறைந்து இருந்த முதலையை லாவகமாக பிடித்து கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர் ,மேலும் இவ்வகையான முதலைகள் ஆழ்ந்த நீர்நிலைகளில் மட்டுமே காணப்படும் என்று வனத்துறையினர் கூறுகின்றனர்.

Advertisment

 Chidambaram area villages that become a tent of crocodiles

இது சானிமுதலைகள் ஆகும். நீர்நிலைகளில் ஆடு, மாடு, மற்றும் மனிதர்கள் உள்ளுக்குள் இழுத்து புதர்களில் வைத்து அழுகிய பின் உணவாக உட்கொள்ளும் ரகத்தைச் சார்ந்தது, என்று வனத்துறையை சார்ந்த கஜேந்திரன் தெரிவித்தார் எடை 800 கிலோ முதல் 1000 கிலோ வரை இருக்கும். இது பெண் முதலை ஆகும், உடம்பின் பின்புறத்தில் துவாரத்தை வைத்து அவர்கள் பெண் முதலை என்று கூறினார்கள்.மேலும் இவ்வகை ராட்சச முதலைகளை அடிக்கவோ, துன்புறுத்தவோ கூடாது, என்ற வனத்துறை விதி கட்டுப்பாடு உள்ளதால் இளைஞர்கள் பாதுகாப்புடன் எங்களிடம் ஒப்படைத்தனர்.இதை பத்திரமாக அருகிலுள்ள வக்கிரமாரி நீர்தேக்கத்தில் விடுகின்றோம்.மேலும் கூத்தன் கோயில் இளைஞர்கள் கூறும்போது தொடர்ந்து கொள்ளிடம் பகுதி கரையோர 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இதுபோன்று கொள்ளிடம் ஆறுகளில் இருந்தும் வீராணத்தில் இருந்தும் தண்ணீர் திறக்கும் போது புதரில் உள்ள முதலைகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு இங்குள்ள பெராம்பட்டு, கூத்தன் கோயில், வேளக்குடி அகரம் நல்லூர் பழைய கொள்ளிடம் வாய்க்கால், மற்றும் வல்லம்படுகை கடவாச்சேரி, ஜெயங்கொண்ட பட்டினம், பிச்சாவரம் பகுதிகளுக்கு நீந்தி சென்று விடும், மேலும் இது தண்ணீரில் இறங்கும் கால்நடைகள் மற்றும் ஆட்களை பிடித்து ஏராளமான ஆடு மாடுகளும், ஐந்துக்கும் மேற்பட்ட உயிர் பலியும் ஏற்பட்டிருக்கிறது.எனவே இந்த பகுதியில் முதலை பண்ணை அமைத்து இந்த பகுதியில் உள்ள முதலைகளை பாதுகாக்கவேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலகிருஷ்ணன் முதலைப் பண்ணை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து சட்டமன்றத்திலும் பதிவு செய்துள்ளார்என்பதுகுறிப்பிடத்தக்கது.

CHITHAMPARAM crocodile forest
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe