சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சிதம்பரம் அருகே உள்ள லால்பேட்டை முபாரக் தெருவைச் சேர்ந்த அல்மின் சித்திக் மனைவி, ரவ்லத் நிஷா வயது 49 என்ற பெண்மணி செவ்வாய்க்கிழமை இன்று (12/05/2020) காலை சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
இவர் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு கரோனா தொற்று அறிகுறியுடன் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.