‘வங்கக் கடலில், மன்னார் வளைகுடா பகுதி மற்றும் அதனை ஒட்டிய இராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதியில், நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் 04/12/2020 அன்று 02.30 மணியளவில் இருந்து,தொடர்ந்து அதே இடத்தில் நிலையாக இருக்கிறது.
இது மேற்கு - தென்மேற்குத் திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக, இராமநாதபுரம் மற்றும் அதையொட்டியுள்ள தூத்துக்குடி கடற்கரையை, அடுத்த 6 மணி நேரத்தில் கடக்கக் கூடும். அடுத்த 24 மணி நேரத்தில், இதுமேலும் வலுவிழந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறக்கூடும்.ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலத்தால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடலூர், சிதம்பரத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.கடலூர் மாவட்டம் பரதம்பட்டில் தொடர் மழை காரணமாக, சுமார் 50,000 வீடுகளில், வெள்ள நீர் புகுந்ததால், மக்கள் அவதியடைந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கிய12 பேரை, படகு மூலம்பேரிடர் மீட்புத்துறையினர் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மழைநீரில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.அதேபோல் சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள காவல் நிலையத்தை மழைநீர் முழுதுவமாகக்கடல் போல்சூழ்ந்துள்ளது. அங்கே நிறுத்தப்பட்டிருந்தஇருசக்கர வாகனங்கள், கார்கள்,ட்ராக்டர்என அனைத்தும் மழைநீரில் மூழ்கிவருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-12/reyry557.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-12/re75757.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-12/wete5et.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-12/shgfyry.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-12/estetetete.jpg)