/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_3345.jpg)
சிதம்பரம் அருகே சிலுவைபுரம் கிராம தேசிய நெடுஞ்சாலை பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது புவனகிரி பகுதியில் இருந்து வடஹரிராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த புருஷோத்தமன்(32) அவரது தங்கை புனிதா(30) ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். இவர்களுக்கு எதிராக சிதம்பரத்திலிருந்து புவனகிரியை நோக்கி கார் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது.
மழையில் எதிர்பாராத விதமாக கார், இருசக்கர வாகனத்தில் மோதி இரு சக்கர வாகனம் தூக்கி வீசப்பட்டது. பின்னர் காரும் அருகே இருந்த புளிய மரத்தில் மோதி முன்பகுதி கடும் சேதமானது. காரை ஓட்டிவந்த வடகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த அசோக்குமார்(32) இருசக்கர வானகத்தில் வந்த புருஷோத்தமன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலே பலியாகியுள்ளனர். இதில் புனிதாவுக்கு கைமுறிவு ஏற்பட்டும், காரில் வந்த குகன் சுயநினைவின்றியும் சிதம்பரம் ராஜ முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து சிதம்பரம் தாலுகா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)