/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/c1_10.jpg)
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து முஸ்தபா( பெயர் மாற்றப்பட்டுள்ளது) மற்றும் இருவர் டெல்லி முஸ்லீம் மாநாட்டிற்குச் சென்று திரும்பியவர்கள். அதனடிப்படையில் அவரது வீட்டில் இருவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். முஸ்தபா சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/c3_6.jpg)
கடலூர் மாவட்டம் சிதம்பரம் எடத் தெருவைச் சேர்ந்த 3 பேர் கடந்த மாதம் டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளனர். டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்களுக்கு கொரோனா தொற்று பரவி்யுள்ளதை அடுத்து, சிதம்பரம் தாசில்தார் ஹரிதாஸ், மற்றும் சிதம்பரம் துணை காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், முஸ்தபாவை, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அழைத்து அவரது ரத்த மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டதாக தகவல் கூறுகிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/c2_19.jpg)
இவருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்வதற்காக ஆரம்பகட்ட மருத்துவ பரிசோதனை சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் நடைபெறுகிறது. மேலும் முஸ்தபா வீட்டில் இருவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இதனால் முஸ்தபா குடியிருந்த பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இப்பகுதியில் தடுப்புகள் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இப்பகுதியில் பாதுகாப்பு பணிக்காக பலத்த பாதுகாப்பு போடப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)