சிதம்பரத்தில் உள்ள மாவட்ட பத்திர பதிவுத்துறை சார்பதிவாளர் அலுவலகத்தில் கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் மெல்வின் ராஜாசிங் தலைமையில் லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் திருவேங்கடம், மாலா, சண்முகம் உள்ளிட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பத்திர பதிவுக்கு பதிவாளர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் லஞ்சம் பெறுவதாக வந்த குற்றச்சாட்டை தொடர்ந்து நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் மற்றும் கணக்கில் வராத ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அலுவலகத்தில் பத்திரப்பதிவு புரோக்கர்கள் இருந்தபோது லஞ்ச ஒழிப்பு துறையினர் உள்ளே சென்றதும் அவர்களையும் விசாரணை செய்து வருகிறார்கள்.