Advertisment

50 பைசாவுக்கு சிக்கன் பிரியாணி; அசத்தல் ஆஃபரால் அலைமோதிய கூட்டம்

Chicken biryani those who bring 50 paise

கரூரில் 50 பைசா கொண்டு வருபவருக்குசிக்கன்பிரியாணி என்ற தனியார் பிரியாணி கடை அறிவிப்பால் வாடிக்கையாளர் கூட்டம் நிரம்பி வழிந்தது.

Advertisment

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமம் பகுதியில் தனியார் பிரியாணி உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகம் துவங்கி ஒரு ஆண்டு ஆனதை முன்னிட்டு ஆண்டு விழா கொண்டாடும் விதமாக வாடிக்கையாளர்களுக்கு உணவகம் சார்பில் வித்தியாசமான சலுகை அறிவிக்கப்பட்டது. 50 பைசா கொண்டு வருபவர்களுக்கு ஒருபிளேட்சிக்கன்பிரியாணி வழங்கப்படும் என்று அறிவிப்பு விடப்பட்டது.

Advertisment

இந்த அறிவிப்பை அடுத்து பிரியாணி உணவகத்திற்கு வாடிக்கையாளர் கூட்டம் அலை மோதியது. வாடிக்கையாளர் கூட்டம் கட்டுக்குள் கொண்டு வர முடியாத அளவிற்கு அலை மோதிய காரணத்தால், தகவல் அறிந்தபசுபதி பாளையம்காவல் நிலையபோலீசார்அப்பகுதிக்கு வந்து உணவக உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுத்தனர். மேலும், அனுமதி பெறாமல் இதுபோன்று சலுகைகள் விடக்கூடாது என்று எச்சரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

police briyani karur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe