Chess Olympiad

செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான ஜோதி தமிழகம் வந்தடைந்தது.

Advertisment

சென்னை மாமல்லபுரத்தில் உலகின் 188 நாடுகளிலிருந்து பல்வேறு வீரர்கள் கலந்துகொள்ளும் 44ஆவது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டி வரும் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துவரும் நிலையில், நேற்று ஒத்திகை போட்டி நடத்தப்பட்டது.

இந்த நிலையில், செஸ் ஒலிம்பியாட் ஜோதி இன்று தமிழகம் வந்தடைந்தது. ஜோதி பேரணியை டெல்லியில் கடந்த 19ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நாட்டின் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் என 75 நகரங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட இந்த ஜோதி இன்று கோவைக்கு வந்தடைந்ததும் அமைச்சர்கள் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மலர்கள் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். அடுத்ததாக இந்த ஜோதி சேலம் மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.