Chess Olympiad... Sathwani who claimed the first victory

Advertisment

மாமல்லபுரத்தில் சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்று தொடங்கிய நிலையில் இந்திய அணியில் விளையாடிய சத்வாணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளார்.

இன்று நடைபெற்ற போட்டிகளில் இந்தியா சார்பில் இந்திய ஓபன் பிரிவு ஏ, பி, சி என மூன்று அணிகளும் பெண்கள் பிரிவில் ஏ, பி, சி என மூன்று அணிகளும் என மொத்தம் 6 அணிகள் களமிறங்கின. இதில் இந்திய ஓபன் பிரிவு பி அணியில் விளையாடிய இந்திய வீரர் சத்வாணி வெற்றி பெற்றுள்ளார். ஐக்கிய அமீரக வீரர் அப்துல் ரகுமானை வீழ்த்தி இந்த வெற்றியை தன்வசமாக்கி உள்ளார் சத்வாணி. வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய சத்வாணி 36 ஆவது காய் நகர்த்தலில் வெற்றி பெற்றுள்ளார். அதேபோல் பெண்கள் பிரிவில் ஜப்பான் அணியை வீழ்த்தியுள்ளது ஸ்பெயின்.