Advertisment

செஸ் ஒலிம்பியாட் போட்டி- டீசர் வீடியோவை வெளியிட்டார் ரஜினிகாந்த்! 

Chess Olympiad - Rajinikanth releases teaser video!

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் ஜூலை 28- ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10- ஆம் தேதி வரை 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. சுமார் 187 நாடுகளைச் சேர்ந்த 2,000- க்கும் மேற்பட்ட வீரர்கள் போட்டியில் பங்கேற்க உள்ளனர். இந்த நிலையில், பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாக்கப்பட்டுள்ள செஸ் ஒலிம்பியாட் டீசரை நடிகர் ரஜினிகாந்த் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Advertisment

செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான டீசர் வீடியோவை வெளியிடுவதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. செஸ் ஒலிம்பியாட் முதன்முறையாக நம் தமிழகத்தில் நடைபெற இருப்பது நமக்கெல்லாம் பெருமை என்று தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், கரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் குணமடைய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான டீசரில் முதலமைச்சரும் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Chennai Chess rajinikanth
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe