Skip to main content

செஸ் ஒலிம்பியாட் ஃபீவரில் தமிழ்நாடு! (படங்கள்) 

Published on 26/07/2022 | Edited on 26/07/2022

 

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு வெகு விமர்சையாக செய்துவருகிறது. தமிழ்நாடு முழுவதும் செஸ் ஃபீவரை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் அந்த ஃபீவர் கொஞ்சம் கூடுதலாக உள்ளது. சென்னையில் திரும்பு இடங்கள் எல்லாம் செஸ் ஒலிம்பியாட் குறித்தான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் அந்த துவக்க விழாவிற்காக நேரு உள்விளையாட்டு அரங்கு தயாராகிவருகிறது. அதேபோல்,  சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மாணவ மாணவிகள் சதுரங்கத்தில் வரும், சிப்பாய்கள், குதிரைகள், யானைகள், ராஜா, ராணி போன்ற வேஷங்களிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.  இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா ஆகியோர் கலந்துகொண்டனர். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

அர்ஜுனா விருதை பெற்ற தமிழக செஸ் வீராங்கனை

Published on 09/01/2024 | Edited on 09/01/2024
Arjuna award winning chess player from Tamil Nadu

மத்திய அரசின் விளையாட்டுத்துறை அமைச்சகம் சார்பில் விளையாட்டு வீரர்களுக்கான அர்ஜுனா விருது 26 பேருக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. கிரிக்கெட்டில் சிறந்த பங்களிப்பு செய்ததற்காக இந்திய கிரிக்கெட் வீர முகமது ஷமிக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டது. அதே சமயம் இந்த விருது பட்டியலில் அண்மையில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்ற தமிழக வீராங்கனை வைஷாலிக்கு அர்ஜுனா விருதை மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் அர்ஜுனா விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு அர்ஜுனா விருதினை வழங்கினார். மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் கிராண்ட்மாஸ்டர் வைஷாலிக்கும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு அர்ஜூனா விருதினை வழங்கினார். இதே போன்று மற்ற விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் அர்ஜுனா விருதை குடியரசுத் தலைவரிடம் இருந்து பெற்றுக் கொண்டனர்.

தமிழ்நாட்டில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெற்ற முதல் பெண் வீராங்கனை வைஷாலி என்பதும், கடந்த ஆண்டு பிரக்ஞானந்தா அர்ஜுனா விருது பெற்ற நிலையில் இந்தாண்டு அவரது சகோதரி வைஷாலிக்கு அர்ஜுனா விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி; பட்டம் வென்ற தமிழக வீரர்!

Published on 21/12/2023 | Edited on 21/12/2023
Tamil Nadu player who won Chennai Grand Masters Chess Championship title

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி - 2023, சென்னை லீலா பேலஸில் டிசம்பர் 15 முதல் இன்று (21.12.2023) வரை நடைபெற்றது. இந்தப் போட்டியில் 8 சர்வதேச மற்றும் இந்திய கிராண்ட்மாஸ்டர்கள் கலந்து கொண்டு 7 ரவுண்ட் - ராபின் சுற்றுகள் கிளாசிக் செஸ் வகையில் விளையாடினார்கள்.

இந்நிலையில் சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீரர் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். 7 சுற்றுகளின் முடிவில் குகேஷ் மற்றும் அர்ஜுன் எரிகைசி தலா 4.5 புள்ளிகள் பெற்றிருந்தனர். அதனைத் தொடர்ந்து 7வது மற்றும் இறுதிச்சுற்று ஆட்டத்தில் டைபிரேக்கர் முறையில் குகேஷ் வெற்றி பெற்றார். இப்போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ரூ. 50 இலட்சம் தமிழ்நாடு அரசால் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சாம்பியன் பட்டத்தை கிராண்ட் மாஸ்டர் குகேஷ் வென்றதன் மூலம் கேண்டிடேட்ஸ் போட்டிக்கு தகுதிபெறும் வாய்ப்பை பெற்றுள்ளார். மேலும் சர்வதேச கிராண்ட்மாஸ்டர்கள் பர்ஹாம் மக்சூட்லூ, பி. ஹரிகிருஷ்ணா, லெவோன் அரோனியன், பாவெல் எல்ஜனோவ், அலெக்சாண்டர் ப்ரெட்கே மற்றும் ஸ்ஜுகிரோவ் சனான் போன்ற வீரர்களும் இந்த போட்டியில் பங்கேற்றனர்.