Advertisment

செஸ் ஒலிம்பியாட் கோலாகலம்... தமிழகம் வந்தார் மோடி!

NN

மாமல்லபுரத்தில் நடைபெறும் சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் இன்று (28/07/2022) தொடங்குகின்றன. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 350 அணிகள் பங்கேற்கின்றனர். ஆடவர் பிரிவில் 188 அணிகளும், மகளிர் பிரிவில் 162 அணிகளும் விளையாடவுள்ளன. இந்தியா சார்பில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் தலா மூன்று அணிகள் களமிறங்குகின்றன.

Advertisment

ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில், நடைபெறவிருக்கும் தொடக்க விழாவில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு தொடங்கி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி சென்னை வந்துள்ளார். சென்னை விமானநிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐ.என்.எஸ் கடற்படை தளத்திற்கு வந்து அங்கிருந்து சாலை மார்க்கமாக நேரு விளையாட்டு அரங்கத்திற்கு வர இருக்கிறார்.

Advertisment

Chennai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe