Advertisment

திருச்சி வந்தது செஸ் ஒலிம்பியாட் ஜோதி! 

Chess Olympiad  has arrived in Trichy!

44வது செஸ் விளையாட்டுப் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்காக செஸ் ஒலிம்பியாட் ஜோதியை கடந்த 19ம் தேதி பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இது நாடு முழுக்கப் பயணித்துவருகிறது. அந்த வகையில் நேற்று மதுரை வந்தடைந்தது. அங்கு இருந்து கிளம்பிய ஜோதி இன்று காலை திருச்சி வந்தடைந்தது. திருச்சி விளையாட்டு அரங்கில் அதனை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் பெற்றுக்கொண்டார். அதன்பிறகு ஜோதி விளையாட்டு வீரர்கள், மாணவர்கள், காவலர்கள் உள்ளடங்கிய ஜோதி ஓட்டக் குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Advertisment

இந்நிகழ்வில் மாநகர காவல் ஆணையர் ஜி.கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகர காவல் துணை ஆணையர்கள் பி. ஸ்ரீதேவி, அன்பு, சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.இனிகோ இருதயராஜ், அ.சௌந்தரபாண்டியன், எஸ்.ஸ்டாலின்குமார், ந.தியாகராஜன், எம்.பழனியாண்டி, விளையாட்டுத்துறை முதுநிலை மண்டல மேலாளர் ராமசுப்பிரமணியன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ஞானசுகந்தி, மண்டலக் குழுத் தலைவர் ஜெயநிர்மலா மற்றும் அலுவலர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisment

திருச்சி மாவட்ட விளையாட்டரங்கில் தொடங்கிய செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம், மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம் வழியாக மன்னார்புரம், ரயில்வே ஜங்சன் மேம்பாலம், ரயில்வே ஜங்சன், தலைமைஅஞ்சல் நிலையம், மகாத்மா காந்தி சிலை ரவுண்டானா, மாநகராட்சி சாலை, கோர்ட் ரோடு, சாலைரோடு, காவிரிப் பாலம், அம்மா மண்டபம், ஸ்ரீரங்கம், சமயபுரம் மற்றும் முக்கொம்பு வரை சென்று பின்னர் மாவட்ட விளையாட்டரங்கம் வந்தடைந்து. இன்று மாலை சென்னைக்கு இந்த ஜோதி எடுத்துச் செல்லப்படுகிறது.

trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe