Advertisment

செஸ் ஒலிம்பியாட்; திருச்சியில் கின்னஸ் சாதனை முயற்சி! 

Chess Olympiad; Guinness record attempt in Trichy!

44வது செஸ் ஒலிம்பியாட் விளையாட்டுப் போட்டி சென்னையில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் திருச்சி கேம்பியன் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் உலக சாதனை நிகழ்த்தும் விதமாக அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளின் 2,108 மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளும் மாபெரும் சதுரங்க விளையாட்டுப் பாடம் நிகழ்ச்சி இன்று (16.07.2022) காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.

Advertisment

Chess Olympiad; Guinness record attempt in Trichy!

இந்நிகழ்வில் பிரபலமான பாரா ஒலிம்பிக் செஸ் வீராங்கனை கா.ஜெனித்தா ஆண்டோ வாயிலாக, செஸ் விளையாட்டிற்கான பாடம் கற்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அனைத்து மாணவ. மாணவிகளுக்கும் செஸ் செட் வழங்கப்பட்டு சதுரங்க விளையாட்டுப் போட்டி நடத்தப்படுகிறது. இதனைத் தொடர்ந்து உலக சாதனை நிறுவனங்களின் ஆய்வாளர்கள் இந்த ஆய்வுகளை மேற்கொள்வதன் அடிப்படையில் உலக சாதனை சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.

Advertisment

Olympiad Chess
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe