Skip to main content

வண்ணமயமான கலை நிகழ்ச்சி; செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா (படங்கள்)

 

சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா நேற்று (09/08/2022) மாலை 05.30 மணிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்தியாவின் இதயத்துடிப்பு என்ற பெயரில் டிரம்ஸ் கலைஞர் சிவமணி தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. அதேபோல், பியானோ கலைஞர் ஸ்டீபன் தேவசி உள்ளிட்டோர் பங்கேற்ற இசை நிகழ்ச்சியும், அந்தரத்தில் பறந்து கொண்டே பியானோ வாசிப்பு, நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.  இதனைத்தொடர்ந்து தமிழ் மண் நிகழ்ச்சி கலையின் இரண்டாம் பாகம் நிறைவு விழாவில் நிகழ்த்திக் காட்டப்பட்டது. அதன்பிறகு செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !